உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54 ஆசிரியர் : ஏதேனும் ஐயம் இருந்தால் கேளுங்கள். மாணிக்கம் : காக்கை-காகம்-என்று ஏன் ஐயா பெயர் வந்தது? ஆசிரியர் : (சிரிக்கின்றார்) முருகேசன் : இது கூடவா தெரியாது! கா - கா - என்று கத்துவதால், காக்கை என்று பெயர் வந்தது. (எல்லா மாணவர்களும் சரி சரி என்று சொல்லுவது போல் தலை அசைக்கின்றனர்) (மாணிக்கம் எழுந்து நிற்கின்றான்) ஆசிரியர் : உனக்கென்ன ஐயம்? உனக்குப் புதுமாதிரி யாகத் தோன்றுமே! மாணிக்கம் : ஆம் ஐயா! கா - கா - என்று சத்தம் போடு கிறதே அந்தச் சத்தம் தாங்கள் சொன்ன இந்தக் குறட்பாவிலேயே இருக்கிறதே! ஆசிரியர் : அப்படியா? எங்கே சொல் பார்ப்போம்! (எல்லா மாணவர்களும் மாணிக்கத்தை வியப்போடு பார்க்கிறார்கள்) - மாணிக்கம் : 'காக்கை கரவா கரைந்துண்ணும்' என்ற மூன்று வார்த்தைகளிலும் முதல் எழுத்தைச் சொல்லிப் பார்த்தால் 'காகக’ என்று வருகிறது ஐயா! (எல்லா மாணவர்களும், ஆசிரியரும் கொல்’ என்று சிரிக்கிறார்கள்) ஆசிரியர் : மாணிக்கம்! உன்னுடைய நுட்பமான அறிவு நன்றாக இருக்கிறது! எனக்குக் கூட இது தோன்ற வில்லையே! மாணவர்களே! சிறிது நேரம் இந்தப் பூங்காவைச் சுற்றிப் பார்ப்போம், வாருங்கள்!