உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

55

(ஆசிரியர் முன்னால் நடந்துபோக மற்ற மாணவர் கள் பின்னால் தொடர்ந்து செல்லுகின்றனர்) (சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்த ஆசிரியர் ஓரிடத் தில் நின்றார். மாணவர்களும் நிற்கின்றனர். ஆசிரியர் ஒன்றைச் சுட்டிக் காட்டினார். மாணவர்கள் பார்க்கின் றனர்.) சுந்தரம் : மெதுவாக நகர்ந்து போகின்றதே ஆமை. மணி : ஆமாம் ஐயா! கால்களையும் தலையையும் நீட்டு கிறது; பிறகு உள்ளே இழுத்துக்கொள்ளுகிறதே. பார்க்கப் பயமாகவும் இருக்கின்றதய்யா! ஆசிரியர் : (மாணவர்களைப் பார்த்து) பயப்படாதீர்கள்: ஏன் பயப்படவேண்டும். பூங்காவில் எல்லாம் இது போல தண்ணிர்விட்டு குளம் போல அமைத்திருப்பார் கள். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சுற்றிலும் பூச்செடிகளும், நடுவில் குளமும் அதற்குள் மீன், ஆமை முதலியன இருப்பதும் பூங்காவுக்கு வருகின்ற மக்கள் வேடிக்கையாகப் பார்த்துப் போவதற்காகத்தான்! மாணிக்கம் : எல்லோரும் நன்றாகப் பார்த்துவிட்டோம் ஐயா ! ஆசிரியர் : இந்த ஆமைக்குப் பாதுகாப்பாக இருப்பது எது தெரியுமா? - (மாணவர்கள் பேசாமல் நிற்கின்றனர்) இந்த ஆமை யின் முதுகு ஒடுதான் இந்த ஆமைக்குச் சிறந்த பாது காப்பு. அந்த ஒடு மிகவும் பலமாக இருக்கும். நன்றாக உற்று நோக்குங்கள்! மணி : அடிக்கடி அதன் உறுப்புகளை உள்ளே இழுத்துக் கொள்ளுகிறதே! ஏன் ஐயா அப்படி? ஆசிரியர் : ஆமைக்குத் தலையும். நான்கு கால்களும் மென்மையாகத்தான் இருக்கும்; ஆனால் அவற்றை