திருக்குறளார் வீ. முனிசாமி D, 4, டர்ன் புல்ஸ் சாலை, நந்தனம், சென்னை-600 035. வள்ளுவர் வழியே நல்வழி வாழ்க்கையில் அதுவே நம்வழி உலகப் பொதுமறை என்னும் புகழுடன் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் மக்களிடையே சிறந்து விளங்கி வருகின் றது. என்னுடைய இளமைக் காலந் தொட்டே திருக் குறளின் மீது அளவுகடந்த பற்று வைத்து 1330 குறட்பாக் களையும் மனனம் செய்தேன். சிறந்த தமிழறிஞர்களிடம் உரை விளக்கம் அறிந்து பயனடைந்தேன். உயர் நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத் திலேயே சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் அந்தத் துறையில் பயிற்சிப் பெற்றேன். உயர் நிலைப் பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் திருச்சிராப்பள்ளி நகரத்திலேயே முடித்தேன். பின்னர், சட்டக் கல்லூரி படிப்பிற்காக சென்னைக்கு வந்து சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். 1935 ஆம் ஆண்டில் திருக்குறள் சொற்பொழிவினைத் தொடங்கிய நான் இன்றுவரை இயன்றவரை பணியாற்றி வருகின்றேன். சிறந்த புலவர்களிடையே அறிமுகமாகி யிருந்த திருக்குறளைப் பாமர மக்கள் அறியுமாறு செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட நான் ஒாளவு வெற்றி பெற்றேன் என்று பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிற்றுார்கள், பேரூர்கள், பற்பல நிறுவனங்கள், உயர்நிலைப் பள்ளிகள் - கல்லூரிகள், இவைபோன்ற நிறுவனங்கள்
பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/7
Appearance