உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

58 அடக்கலாற்றின் - அடக்கி வைத்துப் பழகும் வல்லமை பெற்றுவிட்டால், ஏழு பிறப்பும் - ஏமுேழு பிறப்பிலும், ஏமாப்பு உடைத்து - பாதுகாப்பாக இருக்கும். (மாணவர்கள் எழுதியதைப் படித்துக்கொண்டிருக் கின்றனர்) இப்போது நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்! முதலில் மணி, சொல்லட்டும்! ஆமை யினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய குணம் என்ன? மணி : ஆமையினிடமிருந்து அடக்கம் என்கிற குணத்தி னைக் கற்றுக்கொள்ளவேண்டும். அடக்கம் மிகவும் சிறந்த குணம் ஐயா ! ஆசிரியர் : இப்போது முருகேசன் பதில் சொல்லட்டும்; ஐந்து அடக்கம்வேண்டும் என்று சொன்னால் எந்த ஐந்து? d முருகேசன் : மெய், வாய், கண், மூக்கு, செவி, ஆகிய ஐந்து பொறிகளையும் அடக்கிக்கொண்டு வாழ வேண்டும். ஆசிரியர் : அடக்காவிட்டால் என்ன ஆகும். முருகேசன் : அடக்கமில்லாதவன் துன்பம் அடைவான். ஆசிரியர் : 'ஏமாப்பு’ என்றால் என்ன பொருள். மணி : ஏமாப்பு என்றால் பாதுகாப்பு என்று பொருள். ஆசிரியர் : சரி! இந்தக் குறட்பா உங்கட்கு நன்றாகப் புரிந்திருக்கிறது. ஏதேனும் ஐயப்பாடு இருந்தால் கேளுங்கள். -