63
63
மாணிக்கம் : ஐயா! எனக்கு ஒரு சிறு விளக்கம் வேண்டும். ஆசிரியர் : உனக்குப் புரியாததை நன்றாகக் கேட்டுத் தெரிந்து கொள்! எல்லா மாணவர்களுக்கும் பயனுக இருக்குமே! மாணிக்கம் : நாம் பொறுமையாக இருந்தால் இகழ்ந்து பேசுகின்றவன் அப்படியே பேசிக்கொண்டே இருப் பானே! எவ்வளவு நேரம் பொறுத்துக் கொண்டி ருப்பது! ஆசிரியர் : அதோ பார்! அந்த ஆள் தான் தோண்டுவதை நிறுத்திக் கொண்டான். வேறு எங்கேயோ போகின் றான். அவ்வளவுதான்! இகழ்ந்து பேசுகின்ற கெட்ட வனும் பேசிக்கொண்டே இருக்கமாட்டான். பள்ளம் தோண்டிய அந்த ஆள் போய்விட்டதைப் போல் போய்விடுவான். நாம் பொறுமையுடன் இருந்தால் அவனுக்கே புத்தி வந்து திருந்திவிடுவான். பொறுமை யாக இருக்கும் நம்மை எல்லோரும் பாராட்டுவார்கள். நிலையான மகிழ்ச்சி நமக்குத்தான் ஏற்படும். இகழ்ந்து பேசியவனுக்கு அற்ப மகிழ்ச்சிதான். அதுவும் இழி வானது. முருகேசன் : (மாணிக்கத்தைப் பார்த்து) மாணிக்கம்! பொறுமையாக உட்காரப்பா! (எல்லோரும் சிரிக்கின்றார்கள்.) ஆசிரியர் : நீங்கள் எல்லோரும் இன்று மிகவும் உற்சாக மாக இருக்கிறீர்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மாணிக்கம் : (எழுந்திருக்கின்றான்) ஆசிரியர் : என்ன மாணிக்கம்!