உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

67

ஆசிரியர் : முதல் கேள்விக்கு மணி பதில் சொல்லட்டும். புலம்’ என்றால் என்ன? மணி : அறிவு” என்று பொருள் ஐயா! ஆசிரியர் : மாணிக்கம்! நீ சொல் இப்போது, ஏன் கல்வி யறிவு இல்லாதவனை மண்பாவை என்று சொன்னார்? மாணிக்கம் : அந்த உருவத்திற்கும் கண், காது. முகம் முதலிய எல்லா உறுப்புகளும் இருக்கின்றன. ஆனால், அவை ஒரு வேலையும் செய்யாது. அப்படியேதான் இருக்கும். அதுபோல் கல்வி, அறிவு, ஆராய்ச்சி முதலியன செய்யக்கூடிய மனிதனாகப் பிறந்திருந் தாலும், வெறும் அழகுப் பொம்மையாக இருப்பதி னால் அப்படிப்பட்ட மனிதனையும் இப்படிப்பட்ட உருவம் என்றே சொல்ல வேண்டும். ஆசிரியர் : மாணிக்கம்! மிகவும் அருமையான விளக்கம் செய்து விட்டாயே! இந்தக் குறட்பா மிகவும் நன்றாக உனக்கு விளங்கிவிட்டது. உன்னுடைய நண்பர்களின் ஐயங்களுக்கு நீயே விடை சொல். (ஆசிரியர் பேசாமல் இருக்கிறார்) முருகேசன் : மாணிக்கம்! ஒரு சின்ன சந்தேகம்! மாணிக்கம் : அதற்கென்ன கேளப்பா! சின்ன ஐயப்பாடு என்ன; பெரிய ஐயப்பாட்டையும் கேள் சொல்லு கின்றேன், அப்படித்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். (ஆசிரியர் சிரிக்கின்றார் - மாணவர்களும் சிரிக்கின் றனர்.) - முருகேசன் : "நுண்மாண் நுழை புலம்’ என்று குறட்பாவில் கூறப்பட்டுள்ளதே! அதில் நுட்பம் என்பதும், நுழை புலம் என்பதும் நன்றாக விளங்க வில்லையே!