IV எல்லாம் அடியேன் சொற்பொழிவுகளை நிகழ்த்துமாறு அன்பர்கள் பெருந்துணை புரிந்தனர். பம்பாய் நகரத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்த காலத் திலும் டில்லியில் பாராளுமன்றத்தில் 5 ஆண்டுகள் இருந்த காலத்திலும் தொடர்ந்து திருக்குறள் தொண்டினைச் செய்து கொண்டு வந்தேன். "குறள் மலர்' என்ற பெயரில் வாரப் பத்திரிகையை நடத்தி திருக்குறள் பரவ அரிய தொண்டு செய்ய முடிந்தது. பொது மக்களிடத்திலும், பாமர மக்க ளிடத்திலும் எளிமையாகவும், நயமாகவும், நகைச்சுவை யுடனும் திருக்குறளினைப் பேசி அவர்களுக்குப் புரியுமாறு அந்தக் காலத்திலேயே தொண்டு செய்த நல்வாய்ப்பினைப் பெற்றிருந்தேன். 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பேச்சினாலும் எழுத்தினாலும் செய்து வந்த தொண்டினால்தான் தமிழ் மக்களிடையே திருக்குறள் பரவத் தொடங்கியது என்று சொல்லுவது மிகையாகிவிடாது. பேச்சுத் தொண்டுடன், எழுத்துத் தொண்டும் தேவை என்று கருதி, அந்தக் காலத்திலேயே சிறுசிறு நூல்களாக 40 நூல்களுக்கு மேல் வெளியிட்டு, அவைகள் மக்களிடையே நன்கு பரவுமாறு செய்தேன். அந்த நூல்களின் தொகுப் புத்தான் இப்பொழுது வெளியிடப்படுகின்றன. வள்ளு வர் காட்டிய வழி' என்ற இந்த நூலும் அந்தத் தொகுப்பு நூல்களில் ஒன்றாகும். தமிழன்பர்கள் மிகுதியும் பயனடை வார்கள் என்று நம்புவதோடு, பயனடையவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன். அன்புள்ள, தரலாசிரியன். தொட்டினைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. -
பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/8
Appearance