உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68 மாணிக்கம் : (சிறிது சிந்திக்கின்றான்) அதுவா - அது. அது...அது, ஆசிரியரைக் கேட்டே தெரிந்து கொள். (எல்லோரும் உரக்கச் சிரிக்கிறார்கள்) ஆசிரியர் : மாணவர்களே! கேளுங்கள் ! நுண் என்றால் நுட்பம் என்று பொருளாகும். நுட்பமான-ஆழ்ந்தகருத்துகளை அறிவினால் தான் அறிந்துகொள்ள முடியும். அறிவில்லாதவனுக்குக் கூர்மையான சிந் தனையும் ஆராய்ச்சியும் வராது. அந்த நுட்பமான அறிவுதான் பல பொருள்களிலும் நுழைந்து ஆராய்ந்து கண்டுபிடிக்கும் பெருமை வாய்ந்ததாகும். ஆதலால் தான் நுண்மாண் நுழை புலம்’ என்றார்; இப்போது தெரிகிறதா? (மாணவர்கள் எல்லோரும் புரிந்துகொண்டதாகத் தலையசைக்கின்றார்கள்.) வேலன் : இந்தப் பூங்காவில் தாமரைக் குளம் ஒன்று இருக்கின்றது என்று சொன்னார்கள் ஐயா! ஆசிரியர் : ஆம் ஆம்; நான் கூட கேள்விப்பட்டிருக்கின் றேன்; ஆனால், நானும் இதுவரை பார்த்ததில்லை. இது பெரிய பூங்காவாகத்தான் இருக்கின்றது! அதோ ஒரு பலகை கம்பத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறதே! அதைப்போய்ப் படித்துவிட்டுவா. (மாணிக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறார். மாணிக்கம் ஒடுகின்றான். அதைப் படித்துவிட்டுத் திரும்பி வந்தான்.) மாணிக்கம் ! ஐயா! நீங்கள் சொன்னது சரிதான். அந்தப் பலகையில் இதுதான் தாமரைக் குளத்திற்கு வழி’ என்று எழுதி இருக்கின்றார்கள். ஆசிரியர் : வாருங்கள் எ ல் .ே லா ரு ம் குளத்திற்குப் போவோம். எல்லோரும் படிக்கட்டிலேயே உட்கார்ந்து விடவேண்டும். யாருமே தண்ணிரில் இறங்கக்கூடாது. கொடிகள் அதிகமாக இருக்கும். தண்ணிரில் இறங்கி னால் சிக்கிக்கொள்ளுவீர்கள்!