உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70 ஆசிரியர் : தண்ணீர் உயரத்தில்தான் இந்த மலர்களும் இருக்கின்றன ! (மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து 'ஆம் ஐயா என்று கூறுகின்றனர்.) (ஆசிரியர் தொடர்ந்து பேசுகின்றார்) தண்ணிர் எவ்வளவு உயரமாக இருக்கின்றதோ அந்த உயரத்தில்தான் மலர்களும் இருக்கின்றன. தண்ணிர் உயர்ந்துகொண்டு போனால் மலர்களும் உயரத்தில் தெரிகின்றன. தண்ணிர் குறைந்துகொண்டு போனால் மலர்களும் உயரத்தில் குறைந்துவிடுகின்றன. ஆத லால் மலரின் உயரம் எதைப் பொருத் திருக்கிறது? சுந்தரம் : மலரின் உயரம், தண்ணீரின் உயரத்தினைப் பொருத்திருக்கிறது, ஐயா ! ஆசிரியர் : அதுதான் சரியான விடை. மக்களுடைய வாழ்க்கையும்-வாழ்க்கையின் உயர்வும் இதுபோலத் தான் என்பதை திருவள்ளுவர் அருமை யாகக் கூறுகின்றார். நீங்கள் இந்த இரண்டையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த இரண்டு? மாணிக்கம் : தண்ணிரின் உயரமும், மலர்களின் உயரமும் ஆகிய இரண்டும் ஐயா! - ஆசிரியர் : குறட்பாவின் விளக்கம் சொல்கிறேன் கேளுங் கள்: நீரில் உள்ள மலர்களின்-தாள்கள்-அதாவது மலர்களைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற நீளமும்-அந் தத் தண்ணிரின் அளவைத்தான் பொருத்திருக்கின்றது. தண்ணீர் எவ்வளவு உயரமோ அவ்வளவுதான் அந்த மலரும்-மலரின் உயரமும்: அதுபோல மனிதனுடைய வாழ்க்கையில் அவனுடைய ஊக்கம்தான் அவனை உயர்த்தும். ஒருவன் ஊக்கத்தில் சிறந்தவனாக இருந் தால் அவனுடைய வாழ்க்கையின் உயர்ச்சி பெரிதாக