72
72 திருந்தால் வாழ்க்கையில் உயருவார்கள். ஊக்கம் இல்லை யென்றால் தாழ்ந்து போவார்கள். அவ்வளவு தான் ஐயா! ஆசிரியர் : சரியாகச் சொல்லிவிட்டாய்! எல்லோருக்கும் நன்றாக விளங்கி இருக்குமே! மாணிக்கம் : விளங்கிவிட்டது ஐயா! 'மலர்' என்று சொன்னால், எந்த மலர் ஐயா? தாமரை மலரா: அல்லி மலரா அல்லது எந்த மலர் என்பது தெரிய வில்லை ஐயா! ஆசிரியர் : மலர் என்று கூறியது எந்த ஒரு மலரைப்பற்றி யதும் அல்ல; நீரில் மலருகின்ற நீர்ப் பூக்கள் எல்லா வற்றிற்கும் பொதுவாகத்தான் அமைந்த கருத்து. நீரி லுள்ள மலர்கள் என்பதுதான் பொருளாகும். இனி எங்கே போகலாம்? வேலன் : நீரில் பூக்கும் மலர்களைப் பற்றிச் சொன்னிர்கள் ஐயா! நிலத்தில் முளைத்து வளர்ந்திருக்கின்ற பூக்க களைப் பற்றிச் சொல்ல வேண்டாமா? அவற்றைப் பற்றியும் சொல்லுங்கள் ஐயா! ஆசிரியர் : வேலன் சொல்லுவதும் சரிதான்! பூங்காவிலா பூக்களுக்குப் பஞ்சம்? அதோ! பாருங்கள்! யாரோ பூக்கள் பறித்துக்கொண்டிருக்கிறார்கள்! நிறையப் பூக்கள் தெரிகின்றன. பூஞ்செடிகளும் அதிகமாக இருக் கின்றனவே! அங்கே போகலாம் வாருங்கள் ! (ஆசிரிய ருடன் மாணவர்கள் எல்லோரும் பூஞ்செடிகள் இருக்கும் இடத்திற்கு வந்து சேருகின்றார்கள்.) மாணிக்கம் : எத்தனையோ வகை வகையாகப் பூக்கள் இருக்கின்றன ஐயா! எத்தனை நிறங்கள்! அழகு அழ காக இருக்கின்றன! முருகேசன் நமக்கு எதற்குப் பூக்கள்? பெண்கள்தான் பூக்களைத் தலையில் வைத்துக்கொள்ளுவார்கள்!