உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74 ஆசிரியர் : அப்படியா? நீ சொல்லுவது வியப்பாக இருக் கின்றதே! திருக்குறள் சொல்லுவதைப் படித்திருக் கிறாயா? சுந்தரம் : அது தெரியாதய்யா. சிலர் தங்கள் மீது நறுமணப் பொருள்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்! அவர்கள் அருகில் வந்தால் மணம் வருகின்றது. மற்ற வர்கள் வந்தால் மணம் வருவதில்லை! அதைத்தான் நினைத்தேன் ஐயா ! (எல்லோரும் சிரிக்கின்றார்கள்.) ஆசிரியர் : சுந்தரம் சொல்லுவதில் தவறு இல்லையே! அவன் சொல்லுவதும் ஒருவகையில் உண்மைதான்! திருவள்ளுவர் கூறும் சிறந்த நீதியினைச் சொல்லுகின் றேன்: கல்வி கற்ற மக்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் கற்ற கல்வியைப் பலரும் அறியும் வண்ணம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதுதான் கல்வி கற்ற தற்கு அடையாளம். அப்படிச் சொல்லும் திறமை இல்லாமல் இருப்பவர்கள், கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தும் மணமில்லாத பூக்களைப் போன்றவர்க ளாவார்கள்! தாம் கற்ற கல்வியினைப் பலரும் தெரிந்து கொள்ளும்படி எடுத்துச் சொல்லும் திறமை பெற்றவர் கள் மணமுள்ள மலர்கள் போன்றவர்கள்! குறட்பாவினையும் பொருளையும் எழுதிக்கொள் (ஆசிரியர் சொல்ல மாணவர்கள் எழுதுகின்றனர்.) இனருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரை யாதார். கற்ற - தாம் கற்ற நூல்களை, உணர - மற்றவர்கள் அறியும் படியாக, விரித்துரையாதார் - விரித்துச் சொல்ல முடியாதவர் ଏ; ଗt , . . -