க. சண்முகசுந்தரம் 97, பஜனை கோயில் தெரு, சூளைமேடு, சென்னை-600094 நான்கு நூல்கள் நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு யாம் அறிந்த புலவர்களிலே திருக்குறளாரைப் போல் குறட்பாக்களைப் பயின்று பயின்று, அவைகளின் நயத்தை நகைச்சவையோடு சொல்லக் கூடியவர் எங்கும் காணோம். திருக்குறளார் ஒரு பொருளைக் கண்டதும், அதைப் பற்றி வள்ளுவர் கூறிய குறட்பாவைக் கூற வல்லவர். அவருடைய திண்ணிய நினைவாற்றல் எல்லாருக்கும் வராது. அவர் நகைச்சுவையுடன் பேசுவது மட்டுமின்றி நூற் களும் எழுதியுள்ளார். "என்றைய தினம் திருக்குறள் ஒவ்வொரு தமிழன் கையிலும் ஆக்கம் பெறுகின்றதோ அன்றே நாடு முன்னேற்றமடைய முடியும் என்பது ஒருதலை. என்பது திருக்குறளாரின் சீரிய கொள்கையாகும். இக்கொள் கையைப் பரப்ப வேண்டி அவர் பெரியவர்களும், சிறுவர் களும் விரும்பிப் படிக்கும் வண்ணம் சிறு சிறு நூற்களை எழுதினார். அவைகளில் நான்கு சிறு நூற்களின் தொகுப்பு வள்ளுவர் காட்டிய வழி. நூலாசிரியர் ஒவ்வொரு வீட்டிலும் மூத்தவர் சிறுவர் களுக்குத் திருக்குறள் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டி அண்ணன் தம்பிக்குத் திருக்குறள் சொல்லிக்கொடுப்பதாக முதல் நூலை எழுதினார். அவர் ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படித் திருக்குறள் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டி
பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/9
Appearance