81
சுந்தரம் : அம்பு நல்ல செயல் செய்யவில்லை ஐயா! அது எப்படி நன்மை செய்யும் கெடுதியைத் தான் செய் தது. அங்கே இருந்த பறவைகளைத் தாக்கியதே!
ஆசிரியர் : திருவள்ளுவர் கூறுகின்ற நீதியைச் சொல்லுகின் றேன் கேளுங்கள். பகைவர்கள் நம்மிடம் வணக்க மாகப் பேசுவார்களாம். வணக்கமான - பணிவான சொற்களைச் சொல்லிக்கொண்டு நம்மிடம் வந்து பேசு வார்கள். அதைக் கண்டு நாம் ஏமாந்துவிடக் கூடாது. நம்மை ஏமாற்றித் தீமை செய்வதற்காகவே பணிவான சொற்களைச் சொல்லுவார்கள். ஆனால் அத்தனை யும் நமக்குத் தீங்காகத்தான் இருக்கும். ஏன் அவர்கள் தான் பகைவர் ஆயிற்றே! அந்த அம்பு வேகமாகப் போகத்தான் அந்த வளைந்த வில் உதவியாக இருந் தது. வேகமாகப்போன அம்பு என்ன செய்தது. அது போலப் பகைவர்களின் பணிவான சொற்களும் கெடுதி யைத் தான் செய்யும். எழுக்கொள்ளுங்கள். சொல்வணக்கம் ஒன்னர்கண் கொள்ளற்க - வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் ஆசிரியர்: சொல் விளக்கவுரை சொல்லுகிறேன். எழுதிக் கொள்ளுங்கள். வில் வணக்கம்-வில்லினுடைய வளைவானது, தீங்கு-தீமையினை, குறித்தமையான்-குறித்துச் செய்ததால், ஒன்னார் கண்-பகைவர்களிடத்தில், சொல் வணக்கம் - அவர்கள் பேசும் பணிவான சொற்களை, - கொள்ளற்க-நன்மையானவைகள் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.