உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

 கோபால்: குறட்பாக்கள் எல்லாம் தெளிவாகப் புரிகின்றன ஐயா! 'சொல் வணக்கம்' என்று சொன்னீர்களே! எப்படி சொற்கள் வணங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை ஐயா!

ஆசிரியர்: கோபாலன் கேட்ட விளக்கம் நன்றாக இருக்கின்றது. எல்லோரும் நன்றாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சொற்கள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அவை வணக்கமாக இருக்கா. சொற்களைப் பேசுகின்ற பகைவர்கள் குழைந்து குழைந்துப் பேசுவார்கள். அன்பும் அடக்கமும் பணிவும் உள்ள நல்லவர்கள் போல் பேசுவார்கள். அதைத் தான் 'சொல் வணக்கம்' என்றார். அதனைப் பகைவர்களிடம் நம்பக்கூடாது என்றார்.

மணி: 'ஒன்னார்' என்றால் என்ன ஐயா?

சுந்தரம்: மணி! எழுதி இருப்பதைப் படிக்கவில்லையா!

'ஒன்னார்' என்றால் 'பகைவர்' என்று பொருள்.

மாணிக்கம்: பகைவர்களைப் பற்றிப் பேசுவதே கடுமையாக இருக்கிறது. நண்பர்களைப் பற்றிச் சொல்லுங்கள் ஐயா!

ஆசிரியர்: ஆம்! மாணிக்கம்! நண்பர்களைப் பற்றிப் பேசினால் மகிழ்ச்சியாக இருக்குமல்லவா? சொல்லுகின்றேன்; பகைவர்கள் என்ன செய்வார்கள்?

மாணிக்கம்: எப்போதும் கெடுதிதான் செய்வார்கள்.

ஆசிரியர்: நண்பர்கள் என்ன செய்வார்கள்?

முருகேசன்: நமக்குத் துணையாக உதவி செய்வார்கள் ஐயா!

ஆசிரியர்: ஆம்! நண்பர்கள் உதவியாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நண்பர்கள் என்று பொருள். நண்பர்களைப் பற்றியும் சொல்லுகின்றேன். சரி! நான் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்