உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

85

மயில்கள் பார்ப்பதற்குத்தான் நன்றாக இருக்கும். மயில் தோகை விரித்து ஆடும்போது பார்க்க மிகவும் கவர்ச்சியாக இருக்கும். எங்கே இருக்கின்றன பாருங் கள் ! - (எல்லா மாணவர்களும் சுற்றிலும் பார்க்கிறார்கள்.) வேலன் : அதோ தெரிகின்றன ஐயா! மேடாகத் தெரிகின் றதே அங்கே பாருங்கள்! (எல்லோரும் பார்க்கின்றார்கள். மூன்று மயில்கள் நிற்கின்றன. ஒரு மயில் தோகை விரித்து ஆடுவது போல் காட்சியளிக்கிறது.) சுந்தரம் : ஐயா! எல்லோரும் அருகில் போய்ப் பார்க்க லாம். ஆசிரியர் : மயிலின் அருகில் போனால் கூர்மையான மூக்கி னால் குத்திவிடும். யாரும் மயிலினை நெருங்கிப் போக அஞ்சுவார்கள், சற்றுத் தூரத்திலிருந்தேதான் பார்த்துக் களிப்பார்கள். வாருங்கள் மயில் ஆடுவதைப் பார்ப்போம்! மாணிக்கம் : கொஞ்சம் தூரத்திலிருந்தே பார்ப்போம் ஐயா! (எல்லோரும் போகின்றார்கள்.) (வேலனும், கோபாலும் தரையில் கிடப்பதைப் பார்த்துவிட்டு ஓடி அவற்றைச் சேர்த்து எடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.) ஆசிரியர் : பார்த்தீர்களா! வேலனும் கோபாலும் மயில் இறகுகளைக் கொண்டு வந்துவிட்டார்கள். எவ்வளவு அழகாக இருக்கின்றன, பார்த்தீர்களா? (ஒவ்வொரு மாணவனும் வாங்கிப் பார்க்கின்றான்.) மாணிக்கம் : மயிலிறகு எங்கு ஐயா கிடைக்கும்?