உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

86 முருகேசன் : மாணிக்கம், இது கூ ட வா தெரியாது? மயிலிடத்தில்தான் கிடைக்கும். (ஆசிரியர் சிரிக்கின்றார்.) ஆசிரியர் : பார்த்தீர்களா ! இந்த மயிலிறகு எவ்வளவு பளுவாக இருக்கின்றது! (ஆசிரியர் சிரித்துக்கொண்டு கேட்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளுகின்றனர்.) சுந்தரம் : பளுவே இல்லை ஐயா! கனமாகவே இல்லையே! காற்று ப்போல இருக்கின்றதே! அப்படியே பறந்து விடும்போல் இருக்கிறது ஐயா! ஆசிரியர் : ஆம் ஆம்! மி க மி க இலேசானதுதான் மயிலிறகு! மாணிக்கம் : அதனால்தான் இவ்வளவு இறகுகளைக் கத்தையாக வைத்துக்கொண்டிருந்தும் மயில் அழகாக ஆடுகின்றது! இப்போதுதான் எனக்கு விளங்கிற்று. பளுவாக இருந்தால் தூக்கிக்கொண்டு ஆடமுடியாதே! முருகேசன் : அதுமாத்திரம் அல்ல! இன்னொன்றும் புரிய வில்லையா? அந்த மயில் ஆடுவதைப் பார்! எவ்வளவு அழகாக விரித்துக்கொண்டு ஆடுகிறது! கனமாக இருந் தால் இதுபோல விரித்துகொண்டு ஆடமுடியுமா? சுந்தரம் : ஒருக்காலும் ஆடமுடியாது! - அதுமட்டுமல்ல தூக்கிக்கொண்டு நடக்கத்தான் முடியுமா? மணி : முடியவே முடியாது இருந்த இடத்திலேயே இருக்க வேண்டியதுதான்! ஆசிரியர் : மாணவர்களே! போதும் உங்கள் ஆராய்ச்சி! மயிலைப்பற்றி நன்றாக ஆராய்ந்து நல்ல கருத்து களைச் சொல்லக் கேட்டேன். எல்லோரும் உட்கார்ந்து மயிலின் அழகினைப் பாருங்கள்! குறட்பாவும் சொல்லு கின்றேன் கேளுங்கள்! உங்கட்குப் பஞ்சு தெரியுமா?