பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கோட்டம் 9 105 ைகவியரசர் முடியரசன் ஆய்ந்தொரு நிலத்தைத் தேடி அரிதினிற் பண்படுத்தித் தேர்ந்திடும் சிற்பம் வல்லார்த் தேடியிங் கழைத்து வந்து வாழ்ந்திட வண்ணக் கோட்டம் வகுத்தனர் கலைஞர் நெஞ்சில் வாய்ந்திடும் நன்றி யிங்கே வளர்ந்தது கோவிலாக, பாழ்பட்டுக் கிடக்கும் நெஞ்சம் பண்படக் குறளைத் தந்து வாழ்வுக்கு நெறிகள் ஒதும் வள்ளுவன் கோட்டம் காணப் பாழ்பட்டுக் கிடந்த ஏரிப் பகுதியைப் பண்படுத்தித் தாழ்வுற்ற தரையை ஏற்றித் தந்தனன் கோவிலாக துற்றினும் மேலார் சிற்ப آکر اِ நூலினில் வல்லார் கடிச் சோற்றையும் மறந்து கண்கள் துயில்வதும் மறந்து தங்கள் ஆற்றலைப் படைத்துக் காட்ட அவருளி எழுப்பும் ஒசை காற்றிலே மிதந்து வந்து களிப்புற இசைத்த தங்கே.