உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கோட்டம் வ 108 ைகவியரசர் முடியரசன் தமிழக முதல்வராகத் தாம்அமர்ந் திருந்த வேளை இமைவிழி இமையா நோக்க எழுப்பிய கோட்டத் துள்ளே அமைவுறக் கலைஞர் பேரும் அழகுறப் பொறிக்கக் கண்டோம் சமைவுறுங் கோவில் கண்டோர் சரித்திரப் புகழ்தான் என்றார். இலையிதற் குவமை என்றே ஏத்தினர் கண்ட மாந்தர் கலைமலி கோவில் கண்ட காவலன் வாழ்க என்றார் புலையுளங் கொண்ட மாந்தர் புழுங்கினர் புகழைக் கேட்டுக் கலைஞரின் பெயர்பொறித்த கல்லினை எடுத்து விட்டார். இந்திய நாட்டை ஆளும் இந்திரா காந்தி அம்மை நிந்தியார் எவரும் என்று நெருக்கடி நிலையை யாக்கிச் சிந்தியா நிலையில் நின்று செந்தமிழ் ஆட்சி மன்றை இந்திரா கலைத்து விட்டார் எடுபிடி சொல்லைக் கேட்டு.