உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கோட்டம் 111 கவியரசர் முடியரசன்

வைத்திய நாதச் சிற்பி மாதவம் செய்தான் என்று மொய்த்துல குரைக்கும் வண்ணம் மொய்ம்புற முனைந்த மைந்தன் வைத்துள உளியால் இந்த வையமே வியந்து போற்றக் கைத்திறன் காட்டி நின்றான் கல்லையும் கனிய வைத்தே

கயல்விழிக் கண்ண கிக்குக் களங்கமில் அன்னம் வைத்து மயல்விழி மாத விக்கு மாமயில் ஒன்று வைத்து வியனுல கேத்தும் வண்ணம் வியப்புறும் சிற்பம் செய்தான் பயன்கொள நினையா நெஞ்சன் படைத்தனன் புகாரில் அன்றே.

                                           15.4.76.                                               அறுசீர்-விருத்தம்

- ኧ‛

容 宿