இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வள்ளுவர் உலகில்...
2. குடும்ப வாழ்வு
விற்போலும் விழியுடையார் ஆண்மை சேர்க்கும் விழைவுடையார் காதலராய் உலவக் கண்டேன் பொற்பாரும் மெய்க்காதல் விழைவ ரன்றிப் புனைந்துவரும் மெய்காதல் கருத மாட்டார் கற்பாளர் கைகளினால் தொடவும் மாட்டார் கண்களினால் காதல்மொழி பேசி நிற்பார் மற்போர்கள் நிகழ்த்துகிற மறவரைப் போல் மண்தரையில் புரள்கின்ற நிலையும் வேண்டார்
மலர்ந்துவரும் மலரைவிட மெல்லி தென்று வள்ளுவன்சொல் காமத்தைக் கசக்கி ருைத்தே உலர்ந்துவிடச் செய்ததன்பின் நீரை ஊற்றி ஊறவைத்துக் காய்ச்சியதைப் பிழிந்தெடுத்துக் கலந்துவரும் பிறநாட்டுப் பண்பும் சேர்த்துக் கலையென்னும் பெயர்கறிப் படங்க ளாக்கி வளர்ந்துவரும் கலைத்தொழில்கள் அங்கே யில்லை வாழ்வு தரும் கலைத்தொழில்கள் அங்குக் கண்டேன்
மெய் காதல் - உடம்பைக் காதலித்தல்