உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கோட்டம் 117 கவியரசர் முடியரசன்


உகப்புடனே இல்லறத்தில் ஈடு பட்டோர் ஒருவனென ஒருத்தியென வாழ்தல் கண்டேன்; அகப்பொருளைப் புறப்பொருளாச் செய்ய மாட்டார் அதன்செவ்வி நன்குணர்ந்த அந்த விட்டார்; தகப்பனென அன்னைஎனப் பெயர்கள் கொண்டு சரிநிகராய் ஒருமனமாய் வாழ்தல் கண்டேன்; மகப்பெறுதல் ஒன்றுமட்டும் குறியாக் கொள்ளார் மாண்புடைய இல்வாழ்வுப் பயனே கொள்வார்.

பெற்றுவிட்டோம் பிள்ளைகளை, யாது செய்வோம்? பேணுதற்கும் வகையற்றோம் என்று நெஞ்சில் உற்றதுயர் தாங்காமல் புலம்ப வில்லை ஒரிரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாலே, வெற்றுடலின் கவர்ச்சிகளில் மயங்க வில்லை விளைந்துவரும் உளப்பண்பை நயந்து வாழ்ந்தார்; கற்றவரை உருவாக்க வேண்டு மென்ற கடமையினால் நாட்டுக்கும் நன்மை செய்தார்.

  • ... .o._ _o. o * o