உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது கடமை பொய்யகத்தைப் பற்றாமல் துரிய அய்ந்து

   புலன்அழுக்குப் படராமல் மாசு நீக்கிக் 

கையகத்துக் கனியிருக்க அதைவிடுத்துக்

   காயதனைக் கவராமல் மெய்ம்மை கூறிச் 

செய்வினைக்குள் திமைகளைப் புகவி டாமல்

   செம்மையுற ஒழுக்கநெறி விளக்கிக் காட்டி 

வையகத்துள் வாழ்வாங்கு மாந்தர் வாழ

   வழிவகுக்கும் திருமறையைத் தந்தான் வாழ்க.

- உலகவரலாறுரைக்கும் சுவடிக் குள்ளே

   ஒரேடு தமிழினத்தின் வரலா றாகச் 

சொலமறைநூல் தந்தானை, பண்பா டெல்லாம்

   தொகுத்தெடுத்து மொழித்தானை, எங்கள் செந்நாப்

புலவனெனும் பெயரானை, சிறிய பாட்டால்

  புதுமையுற உலகினையே அளந்து காட்டிக் 

குலவுபுகழ் கொண்டானை வணங்கி நின்று

 கொள்கைவழி தடப்பதுநம் கடமை யாகும்.