வள்ளவர் கோட்டம்●
12
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 9 12 0 கவியரசர் முடியரசன் பிற குறிப்புகள் * இளம் பருவத்தில் கவிதை உணர்வை ஊட்டியவர் தாய்மாமன் துரைசாமி அவர்கள். * 20ஆம் அகவை வரைக் கடவுளைப் பற்றிய கவிதைகள் இயற்றினார். அவை கிடைத்தில (1939). கி. 21ஆம் அகவை முதல் சமுதாயச் சூழல், மொழி, நாடு, இயற்கை இவற்றையே பாடி வந்தார் (1940). * 21ஆம் அகவையில் இயற்றிய சாதி என்பது நமக்கு ஏனோ? என்ற கவிதையே முதல் முதலில் அச்சு வாகனம் ஏறியது. இது பேரறிஞர் அண்ணாவால் திராவிட நாடு இதழில் வெளியிடப் பட்டது (1940). ல் தந்தை பெரியாரின் தன்மான இயக்கத் தொடர்பு (1940) * தன் மான இயக்கத் தொடர்பால் வித்துவான் தேர்வில் தோல்வியுறுமாறு செய்யப்பட்டார். (1943) * புதுவை மாநிலத்திற்கு அருகில் உள்ள மயிலத்தில் தலைமறைவாக இருந்து படித்து வித்துவான் பட்டம் பெற்றார். (1947) 8 நவாபு டி.எஸ்.இராசமாணிக்கம் நாடகக் குழுவில் பாடல், உரையாடல் எழுதும் பணி அங்கிருந்த சிறை வாழ்க்கையும் மத வழிபாட்டு முறைகளும் பிடிக்காமல் வெளியேறினார். இ. சென்னையில் தமிழாசிரியர் பணி - பல்வேறு இதழ்களில் இலக்கியப்பணி - பொன்னி இதழில் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் - திராவிட இயக்கத் தலைவர்கள், தமிழறிஞர்களுடன் தொடர்பு (1947-49). * தான் கொண்ட கொள்கைக்காக விதவைக் கலப்புத் திருமணம் செய்து கொள்ளத் தாயாரிடம் வேண்டுதல். "ஒரே மகன் என்பதால், அவ்வாறு செய்ய இயலாது" எனத் தாயார் மறுத்தல் (1948).