பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

16

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 8 16 ைகவியரசர் முடியரசன் பண்பாளர், பிறர்க்குதவும் எந்தல், சாதி தொலைத்தவர், சமயம் அறுத்தவர். பதவி வெறுத்தவர், சமத்துவம் விரும்பி, விளம்பரம் விரும்பார், எளிமை வாழ்வினர், புகழ் கண்டு கூகவார். அன்பு நெஞ்சினர். குழந்தை உள்ளத்தினர், பூமனத்தினர், இனிமைப் பேச்சினர், இளமை விரும்பி, அமைதி விரும்பி, குறிக்கோள் வாழ்வினர். இடர்ப்பாடுகளும், இன்னல்களும் வந்தபோதும், கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல் தடம்புரளாத் தங்கமாக, தன்மானச் சிங்கமாக, தமிழ் வேழமாக, கொள்கைக் குன்றமாக வாழ்ந்தவர். பணம், பதவி, பட்டம், பகட்டுக்குப் பணியாமலும் அரசவைப் பதவிகள் நாடி வந்த போதும், அவைகளைப் புறக்கணித்தும் வளையா முடியரசர் என்றும் வணங்கா முடியரசர் என்றும் புகழ்பெற்றவர், தன்மானக்கொள்கையால், மைய மாநில அரசின் பல அரிய விருதுகளை இழந்தவர். பல்லாயிரம் இளைஞர்களைத் தமிழ் உணர்வாளர்களாக்கியவர், கனவிலும் கவிதை பாடுபவர். பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதாசனைத் தந்தையாகவும் கருதிக் குலமுறை கிளத்தும்' கொள்கையுடையவர். தன்னை மறந்த லயம் தன்னில் இருக்கும் இயல்பினர் - புட்டிகளின் துணையால் அன்று -எட்டியவரை சிந்திக்கும் இயல்பினால், தமது வாழ்நாளில் இறுதியாக அவர் இயற்றிய கவிதை வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக் கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே. தொகுப்பு. கவிய முடியரசனார் முத்தமிழ் மன்றம், ஈரோடு. o o o o o ఈ్మ* *్మతి శ్మీ• ఈ్మ* •్మతి