வள்ளவர் கோட்டம்●
22
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 22 கவியரசர் முடியரசன்
நான்மனத்தில் அஞ்சி நலிவதனால், என்னாட்டு மக்கள் நலங்காக்கும் மாகவலை நாடோறும் மிக்கு வருவதனால், மிஞ்சிவரும் பஞ்சத்தில் தள்ளிவிடு மோஎன்ற தாங்காத் துயரத்தால் வெள்ளிமுடி சூடி வெளிவரு வேன் துன்பகற்ற: என்னாட்டில் மாற்றார்க் கிடமில்லை என்றாக்கித் தன்னாட்சி பெற்றதெனச் சாற்றுமொரு பூங்கொடிதான் பட்டொளி வீசிப் பறந்து சிறந்திருக்கக் கட்டி யமைத்தஒரு காவியத்துக் கோட்டைக்குள் கற்பனை யாலியற்றிக் காட்டும் அரியணையில் பொற்புடன் விற்றிருந்து பூமி தனையாள்வேன்; கட்டிக் களித்திருக்குங் காவியப் பாவையவள் பட்டத் த்ரசியெனப் பக்கத் தமர்ந்திருப்பாள், பேராயம் எட்டென்று பேசும் அரசியலில் சீராய எண்தொகையே பேராயம் என்னாட்டில், அய்ந்து பெருங்குழுவும் ஆள்பவர்க்கு வேண்டுமென்பர்; அய்ந்துபெருங் காப்பியங்கள் அக்குழுவால் நின்றிலங்கும்; யானையொடு தோகுதிரை காலாள் எனும்படைகள் மோனையொடு நல்லெதுகை முற்றிவரும் நாற்பாவாம்; வில்லென்றும் வான்ெறும் வேலென்றும் பல்வகையாச் சொல்கின்ற போர்க் கருவி சுற்றியுள பாவினங்கள்: போரில் படையெடுத்துப் போற்றாது வந்தாரை நேரிற் புறங்கண்டு நெஞ்சம் நிமிர்ந்திருப்பேன்; வாள்வீரங் காட்டி வருவார் எவரெனினும் தோள்வீரங் காட்டுந் துணிவுடையேன் என் புகழைக்