உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

23

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 23 ைகவியரசர் முடியரசன்

கறும் பரணி கொளவில்லை என்றாலும் வீறு பெறவிளங்கும் வீரஞ்சேர் காவியத்தின் நாயகன் நானென்று நானிலத்து மாந்தரெல்லாம் வாய்நிறையப் பாராட்டி வாழ்த்தி மகிழ்வார்கள்; உள்ளத் தெளிவுடனே ஒட்டிவரும் நல்லவர்பால் பிள்ளைத் தமிழ்மொழியாற் பேசி மகிழ்ந்திருப்பேன்; என்கொற்றம் போற்றாமல் எள்ளி வருவாரேல் பின்பற்றுஞ் செம்மாப்பு பீடுபெற நானிற்பேன்; தாழ்வுதர எண்ணித் தருக்குடையார் சூழ்ந்துவரின் வாழ்வு பெரிதன்று, வளையா பதியாவேன்; கள்ளத் தனத்தாற் கயமை புரிவாரின் பிள்ளைத் தனத்தைப் பிறழும் மயக்கத்தைப் போக்கக் கடுகம் புகட்டி, நாலடியில் காக்குமுயர் நன்னெறியைக் காட்டி, உயர்திணையாய் நல்வழியில் நாளும் நடந்திடுக என்றுசொலி அல்வழியை விட்டேக ஆற்றுப் படுத்திடுவேன்; வேற்றுமைக்கு வித்திட்டு வீண்குழப்பஞ் செய்வாரேல் கற்றுக் கிரையாக்கக் கூராய்தம் ஒன்றுடையேன், மெய்யை ஒழித்துவிட்டு மேவுமுயிர் வேறாகச் செய்யுந் தனிநிலைமை சேர்ந்திலங்கும் ஆயுதமாம்: வாள்பிடித்து முன்செல்வேன் வால்பிடித்துப் பின்செல்லேன் கோள்பிடிக்க அஞ்சிடுவேன் கோல்பிடிக்க அஞ்சுகிலேன்: தாள்பற்றி நின்றறியேன் தக்க கவியெழுதத் தாள்பற்றி நிற்பதுண்டு; தன்மான நெஞ்சுண்டு: சுற்றிப் பகைவருமேல் சூழ்ந்ததனைத் தூளாக்க