வள்ளவர் கோட்டம்●
26
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 26 கவியரசர் முடியரசன்
விட்டுப் பிரிந்தறியேன் வேளைதொறும் அந்நினைவே, மெய்யுணர்வால் என்னுளத்தில் மேவுமவர் நோதக்க செய்துவிடின் பேதைமையாற் செய்திருப்பர் என்றமைதி பெற்றிருப்பேன் மேலும் பெருங்கிழமை கொண்டதனால் மற்றதனைச் செய்திருப்பர் என்றும் மனங்கொள்வேன்; எம்மைப் பிரிக்க எவரேனும் முன்வந்து மும்மைப் பொழுதும் முயன்றாலும் செல்லாது; யாப்பதுதான் கோட்டை அரணாகச் சூழ்ந்திருக்கும் காப்பியனார் செய்ததொல் காப்பியமே ஆழ்அகழி; நண்ணார் புகமுடியா நாற்புறஞ்சூழ் கோட்டைக்கு முன்னோன் பவணந்தி முன்வாயில் செய்தமைத்தான்; மாமதியன் கைவல்லான் மாறன் எழுதிவைத்த நூன்முறையால் செய்தமைத்த நுண்மாண் நெடுங்கதவை மோதித் தகர்த்தவரும் மும்மதத்து யானைகளும் பாதிப் பொழுதில் பரிதவித்துப் பின்செல்லும், மாற்றார் படையெடுத்து வந்தறியார் என்னாட்டுள் ஏற்ற தொடைமுடித்தே என்பால் வருவார்; படைகுடி கழமைச்சு நட்பரண் ஆறும் உடையேன் அரசர்க்குள் ஒங்கி உயர்ந்திருப்பேன் முப்போகம் வேண்டி முனைந்து செயல்புரிவார் எப்போகம் வேண்டிடினும் தப்பேதும் செய்தறியார் ஒர்பரத்தைத் தேடி உளமெல்லாஞ் சோர்ந்தாலும் சேர்பரத்தை நாடிச் செலவறியார் என் மாந்தர்; நானாட்சி செய்ந்நாட்டில் நாளும். புதியவரி தானாட்சி செய்யும் தடுப்பார் எவருமிலர்;