பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

31

 கவியரசர் முடியரசன்


                           சாதிப் போர்

பிறப்பொக்கும் அனைத்துயிர்க்கும் என்று சொல்லிப்

   பேராசான் ஆண்டிரண்டா யிரங்கள் செல்ல

இறப்புக்குள் போய்விட்டான் எனநி னைந்தே

   எத்தனையோ ஆயிரங்கள் சாதி சொல்லிப் 

பிறப்பிக்கும் ஆற்றலினைப் பெற்று விட்டோம்;

   பிறகெதற்கு வள்ளுவற்குத் திருநாள் ஒன்று?

சிறப்பிக்கும் நோக்கமிதா? அன்றி ஏய்க்கும்

   செயலுக்குச் சின்னமிதா?தெரியவில்லை. 

சாதியினை ஒழிக்கவெனச் சங்கநாதம், _

  சாதிக்கோர் சங்கமென எங்குங் காணும்;

வேதியனைப் பஞ்சமனைப் படைக்கும் வேதம்

  வேற்றுமயை நமக்குள்ளே இன்னும் ஒதும்;

மேதினியைப் பாழ்படுத்த வந்த சாதி

  மேலுமினி வாழ்வதுதான் என்ன நீதி?

ஒதிவருங் குறளுக்குத் திருநாள் என்றால்

 உண்மையினில் சாதியினி ஒழிதல் நன்றாம்.