வள்ளவர் கோட்டம்●
32
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 32 கவியரசர் முடியரசன் -- இத்தனைநூ றாண்டுகளாய்ச் சாதிப் பேய்தான்
- இரிந்தோட வேண்டுமெனச் சொன்னோம்; ஆனால்
பித்தரைப்போல் மன்பதையை வளர்த்து வந்தோம் பிழையான வளர்ப்புமுறை கொண்ட தாலே அத்தொழுநோய் நமைவிட்டு நீங்கவில்லை; ஆதலினால் முறை மாற்றி வளர்க்க வேண்டும்; உத்திமுறை மாறிவிடின் மாந்தர்க் குள்ளே ஒற்றுமையாம் செடிவளரும் உறவும் பூக்கும்.
எண்ணிலவாய்ச் சாதிமுறை வளர்ந்து விட்டால் யாவரும்ரும் கேளிரெனும் உறவுப் பண்பு மண்ணிலன்றோ புதைபட்டுப் போகும்! சாதி மடமையினை வளர்த்துவிடின் மேல்கீழ் என்ற எண்ணமொன்றே தோன்று மலால் உறவா தோன்றும்? எல்லாரும் ஒரினமாய் வாழ்ந்தா லன்றோ நண்ணிவரும் உறவுமுறை உறவு தோன்றின் நாவலனாம் வள்ளுவற்கும் மகிழ்வு தோன்றும்.
உறவுமுறை வளர்ந்துவரின் அவ்வ ளர்ச்சி உளமொன்றித் தளிர்க்கின்ற காதல் காட்டும்; பிரிவுதருஞ் சாதிமுறை வளர்ந்து விட்டால் பேணிவருங் காதலுக்குச் சாவே கூட்டும்; பிறவியிலே மேலென்றுங் கீழ்மை என்றும் பேசிஉயர் காதலையே தீய்ப்ப தற்குச் சிறிதளவும் நாணுகிலோம் சாதி காப்போம் சிந்தனையைப் பேதைமைக்கே கொடுத்து விட்டோம்.
- இரிந்தோட - தோற்றோ