பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

37

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 37 ைகவியரசர் முடியரசன்

திருடிப் பிழைக்க திருநீரும் பூசிக் குருடர் உலகமெனக் கித்தாட்டம் ஆடுகின்றார்; மக்கள் படுதுயரை மாநிலத்துக் கண்டுணரத் தக்க அறிவிலராய்த் தாம் மட்டும் வாழ்கின்றார்; மற்றோரை வாழ்வித்துத் தாமுமிங்கு வாழுமனம் அற்றோர்பால் நெஞ்சுருகும் அன்புநெறி காண்பதெங்கே? அன்புநெறி இல்லையெனில் ஆருயிரைத் தன்னுயிர் போல் எண்ணும் அருள்நெறிதான் எங்கே தழைத்துவரும்? நல்வழிகள் காட்டவரும் நாளிதழ்கள் மங்கையரை வில்வளையச் செய்வதுபோல் மேனி வளைவுபடக் காட்டும் படத்தைக் கவர்ச்சிப் படமென்று போட்டுப் பொருள்பறிக்கும் புன்மைகள் வாழுலகில் பெண்மை உயர்ந்திடுமா? பேணுமுயர் கற்புநெறி திண்மை அடைந்திடுமா? தீமைதரும் அவ்விதழே நாட்டில் விலையாகும் நாகரிகம் காணுகின்றேன் கேட்டை விளைவிக்கும் கீழ்மைமிகும் இந்நாளில் என்பெயரைச் சொல்லி எடுக்குந் திருநாளால் இன்பமது எள்ளவும் என்மனத்தே தோன்றவில்லை: கொள்கை விளக்குங் குறள்நெறியில் ஒன்றேனும் உள்ளி நடந்தால் உளத்தே மகிழ்ந்திடுவேன் நல்வாழ்வு வாழத்தான் நான்தந்தேன் முப்பாலை அல்வாழ்வு வாழத்தான் ஆரும் விழைகின்றார்: வேண்டுமா வேண்டாவா வேதக் குறள்நூலென் றிண்டுமொழிப் போர்தொடுக்க என்மக்கள் வந்துள்ளார் இந்த இழிநிலைக்கோ இன்பக் குறள்தந்தேன்