உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

39

 கவியரசர் முடியரசன்


       இன்பமா? துன்பமா?

வள்ளுவத்து வாழ்வியலைத் தெளியக் கற்று

   வாழ்வாங்கு வாழ்வதுதான் வாழ்வாம் என்று

தெள்ளுதமிழ்ச் சான்றோர்கள் செப்பி வைத்தார்;

   செப்புமொழி கற்றுணர்ந்து வாழ்ந்தோ மல்லோம் :

பள்ளமுறு கழிநீரின் தேக்கம் போலப்

   பாழாகச் செய்துவிட்டோம் பெற்ற வாழ்வை! 

கள்ளமுறும் பிறநெறியைச் சார்ந்து கெட்டோம்!

   கயமைஎலாம் நம்வாழ்வில் புகுத்தி விட்டோம்!

பிறக்கின்றோம் வளர்கின்றோம் காதல் செய்வோம்

   பிறகு வரும் உறவுகளும் கானு கின்றோம் 

துறக்கமெனப் பேரின்பம் வாழ்விற் காண்போம்

   தொலைப்பரிய துன்பமெனச் சிலநாள் சொல்வோம்

இறக்கின்றோம் இறுதியிலே இறந்த பின்னர்

  *எச்சமெனும் புகழொன்று நிலைத்து நிற்கச் 

சிறக்கின்ற வாழ்வியலைக் கற்றோ மல்லோம்

  சிறுவிலங்கு கூட்டமென வாழ்ந்து விட்டோம்.
  
  
 
  
  

எச்சம் - எஞ்சிநிற்பது