உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

41

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம ை 41 ைகவியரசர் முடியரசன்

வாடைஎனுங் காற்றுவரின் போர்வை கொண்டு

    வருந்தாமல் நடுங்காமல் தடுத்துக் காப்போம்:

தேடரிய வாழ்வுதனில் துன்பம் வந்து

    சேருங்கால் துவளாமல் ஊக்கங் கொண்டு 

பாடுபட அத்துன்பம் விலகிப் போகும்;

   பாருய்ய வந்தவனாம் வள்ளு வன்சொல்

ஏடதனில் இவ்வுண்மை நன்கு தோன்றும்

    இடுக்கண்கள் வருங்காலை நகுதல் வேண்டும்.

இன்பத்தின் பின்பக்கம் துன்பம், அந்த

   இடருக்குப் பின்பக்கம் இன்பம், இந்த

எண்ணத்தை முன்வைத்து வாழ்ந்தால் வாழ்க்கை

   இனிக்கின்ற கனியாகும் அன்றோ? வாழ்வின் 

பின்பக்கம் ஒன்றுண்டாம் என்னும் அந்தப்

  பேருண்மை தனையெண்ண வேண்டும் மற்றைப் 

பின்பக்கம் சாக்காடே ஆகும் என்ற

  பேருண்மை உணர்ந்துவிடின் அச்சம் சாகும்.
  

பிறக்குங்கால் தாலாட்டு, மண்ணில் பின்னர்

   இறக்குங்கால் ஒப்பாரி, இரண்டும் பாட்டு:

மறக்காதீர் வாழ்க்கையொரு கவிதை யாகும்:

  மலர்ந்துவருங் கவிதைக்குள் திளைத்து வாழ்வீர்!

வெறுக்காதீர் வாழ்க்கைதனை சாக்கா டென்றால்

  வீரனுக்கோர் பூக்காடு, கோழைக் குத்தான் 

பொறுக்காத நோக்காடு, வாழ்க்கைப் போரில்

  புறங்காட்டா வீரனைப்போல் வாழ்வி நின்றே.

米 米 米 米 ※