இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வள்ளவர் கோட்டம்●
42
● கவியரசர் முடியரசன்
திருக்குறள் நம் மறை
நமக்கென ஒருமறை யுண்டு. அதை நம்பி நடந்திடு நன்னெறி கண்டு
- நமக்கென
அமைப்பால் உயர்ந்திடும் அருட்பால் மருந்து விருப்பால் அருந்தி இருப்பாய் திருந்தி
- நமக்கென
உடலில் படிந்திடும் அழுக்கினைத் துடைத்தனை உளத்தில் மாசுகள் அடைந்திட விடுத்தனை! மடமை அகன்றிட மாந்தனென் றுயர்ந்திட வாழ்வினைத் துலக்கிடத் தாழ்வினை விலக்கிட
- நமக்கென
எதையெதை யோமறை என்று.நீ போற்றினை என்பயன் கண்டனை இழிநிலை கொண்டனை! கதைகளை நம்பினால் காண்பயன் ஒன்றிலை கருத்தினை வளர்த்திடும் திருக்குறள் படித்திடு
- நமக்கென
ஆயிரம் திருவிளையாடல்கள் பாடினை அம்மஓ! நீயும் ஆடல்கள் ஆடினை! காயினைக் கவர்ந்தனை கனியினை மறந்தனை கருத்தினில் ஒருகுறள் நிறுத்திடின் உயர்ந்தனை
- நமக்கென 2.7.1987