இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வள்ளவர் கோட்டம்●
45
● கவியரசர் முடியரசன்
அறத்தின் வழிகாட்டி
வள்ளுவனை வழிகாட்டி என்று பாட
வன்பாகக் கைகாட்டி விட்டார் நண்பர்;
தெள்ளுதமிழ் நாவலனை உளத்திற் கொண்டு
சிந்தனையாம் பேருலகம் நோக்கிச் சென்றேன்;
துள்ளுநடை போடுகையில் வழியி ரண்டு
தோன்றுவதைக் கண்டங்கே மலைத்து நின்றேன்;
தெள்ளியநல் வழிஎதுவோ? என்று நெஞ்சம்
தெளியாமல் இருவழியும் நோக்கி நின்றேன்.
வடக்குவழி தெற்குவழி என்றிரண்டுள்
வடவழியில் புகத்துணிந்தேன் வாடைக் காற்று
நடுக்கியது மனம்வெறுத்துத் திரும்பி விட்டேன்;
நல்வழியாம் தென்வழியில் நடந்து சென்றேன்;
நடக்கையிலே மணத்தோடு தென்றல் வந்து
நலந்தரலால் புலமெல்லாம் மகிழக் கண்டேன்
கடக்களிறு போல்நடந்தேன்; அவ்விடத்தே
கலகலவென்றொருசிலர்தாம் சிரிக்கக் கேட்டேன்.