உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

46

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 46 கவியரசர் முடியரசன்


நடைநிறுத்தி அவர்தம்மை நோக்கி நின்றேன்;

    நன்கணிந்த திருநீறு குவிந்த கொண்டை

தடையின்றி வளர்ந்திருக்குந் தாடி மீசை

    தளதளத்த மார்பகத்தே பட்டை நூல்கள்

இடையிலொரு நீள்கச்சை இந்த வேடம்

    ஏற்றவரும், தலைமழித்துப் பட்டை நாமம்

உடையவரும், வடநாட்டுக் கொண்டை யிட்ட

    உடல்வலிமை கொண்டவரும் அங்கு நின்றார்.

நகைக்கின்ற பெரியிரே நீவி ரெஸ்லாம்

    நானறியப் புகல்விரோ யாவிi என்று? 

திகைக்கின்றேன் அருள்புரிக என்றேன்; எம்மைத்

   தெரியாயோ வள்ளுவர்தாம் நாங்கள் என்றார்; 

வகைக்கொருவர் நிற்கின்றார்; எத்து ணைப்பேர்

   வள்ளுவர்கள்? என்றயிர்க்குங் காலை மற்றோர்

நகைப்பொலியும் என்செவியிற் கேட்ட தங்கே

   நான்நின்றேன். அவரெல்லாம் மறைந்து விட்டார்.

நகைத்தவர்யார் எனவினவி நின்றேன்; ஆங்கே

  'நான் என்ற விடைகேட்டேன் உருவ மில்லை;

'திகைக்காதே வள்ளுவன்நான், உன்றன் நெஞ்சுள்

  சிரிக்கின்றேன், என்னுருவங் காணாய் தம்பி, 

உகைத்தெழும்பும் உணர்வுடனே யாங்கு வந்தாய்?

  உன்விழைவு யாதென்றான்; வணங்கி நின்று 

பகைப்புலத்தர் சூழ்ச்சிஎலங் கடந்து வந்த

  பாவலனே உனையொன்று வேண்டு கின்றேன்.

  • அயிர்க்கும் கால் - ஐயப்படும்போது