பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

49

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 49 ைகவியரசர் முடியரசன் 'இல்லறத்தைச் செம்மையுற ஆற்று கின்றோன் இருநிலத்துப் பயனனைத்தும் பெற்று வாழ்வான்; நல்லறத்தை விட்டுநின்று காவிதாங்கி நடப்பதனால் நல்லபயன் ஒன்று மில்லை; இல்லறத்து நெறிநிற்போன், துறவறத்தில் இருந்துதவம் நோற்பாரின் நோன்மை கொள்வான்; கல்லடுத்த காடெதற்கு! தவமெ தற்கு? கருணைதரும் இல்லறமே மேலாம் என்றான். அறப்போர்க்குப் பொருள்தெரிய வேண்டும் அய்யா! அல்லல்தரும் செயலன்றோ போரில் உண்டு; மறப்போரை அறஞ்சேர்த்து வழங்கல் ஏனோ? மக்களதைச் செயநினைதல் நன்றோ? என்றேன்; 'மறப்போர்தான் பிறருயிரை எடுப்பதாகும் அறப்போரோ தன்னுயிரைக் கொடுப்பதாகும்; சிறப்பான தமிழ்மானங் காத்தல் வேண்டின் சிறந்ததடா இவ்வறப்போர் செயலிற் காட்டு! உன்னினமும் தாய்மொழியும் நாடும் வாழ உயிரிய வேண்டுமடா வயிற்றுச் சோறு தின்னுதற்கே வாழாதே! மான வாழ்வில் தீங்கொன்று புகுந்திடுமேல் விரங் காட்டி மன்னவன்போல் இந்நாட்டில் வாழ்க என்று வழியுரைத்துப் போய்விட்டான்; எனது நாட்டின் துன்னிவரும் அறப்போர்க்கு வழியைக் காட்டித் துணிவளித்த வள்ளுவனை வாழ்த்துகின்றேன். திருக்குறட் கழகம், காரைக்குடி (1961) 談談談談談