உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

52

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் வ f 52 ைகவியரசர் முடியரசன் நாட்டம் இலராகி நாகரிகம் பெற்றவர்போல் ஊரெல்லாஞ் சுற்றி ஒழுக்கம் உணராமல் பேரெல்லாங் கெட்டழியப் பிஞ்சிற் பழுத்தவரும் எங்கும் பெருகும் இழிநிலையைக் காணுங்கால் எங்கள்திரு நாட்டின் எதிர்காலம் என்னாமோ? வெந்தே உரிமை விழலாகிப் போய்விடுமோ? அந்தோ! எனமயங்க அச்சச் சுவைதோன்றும்; புக்க இருளைப் புறங்காணக் கீழ்வானில் செக்கச்சிவந்துவரும் செங்கதிரைக் காணுவதால் உள்ளங் களித்தே உவகைச் சுவைதோன்றும் வெள்ளமென இன்பம் விளைந்து பெருக்கெடுக்கும்; பாட்டுச்சுவையறிந்த பாரோரே நாம்வாழும் நாட்டுச் சுவையறிவீர் நன்கு. (வள்ளுவர் பேரவை, சிவகங்கை) (29.4.1962) _ عر له عالمه عالمه عالمه عالـه * * * * *