வள்ளவர் கோட்டம்●
56
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 9 56 ைகவியரசர் முடியரசன் இல்லறத்தை இல்அறமா நடத்தி நாளும் இடர்கண்டோன் விலங்கென்றும் பாரம் என்றும் சொல்லிவிட்டுக் காவிக்குள் புகுந்து கொண்டான்; சுவைகாணும் நெறியறியான் வாழ்ந்துங் கெட்டான், இல்லறத்தின் குறிக்கோளைக் குறளிற் காண்போன் எவன்வெறுப்பான்இல்வாழ்வை? மேலோன் சொன்ன நல்லறத்தின் நெறிநிற்போன் இந்த இன்ப நலமொன்றே பேரின்பம் என்று சொல்வான். நெஞ்சங்கள் நிலமாகச் சிறிய செந்நா நிலத்தையுழும் ஏராகக் கருணை யோடு விஞ்சுபுகழ்க் கவியாற்றல் காளை யாக வித்தாக அறமிட்டுப் பொருளைப் பாய்ச்சி நஞ்சுமிழும் அழுக்காறு வெகுளி ஆசை நாலுவகைச் சாதியெனுங் களையெடுத்து நஞ்செய்நிலப் பயிராக விளைத்தான் இன்பம் நானிலத்தின் உயிரெல்லாம் உய்யக் கண்டோம். ஈரடியால் மாநிலத்தார் உள்ள மெல்லாம் இனிதளந்தான் புகழ்கடந்தான் மொழிக டந்தான் ஒரடியும் நெடுமுடியும் காணா வண்ணம் உயர்ந்தோங்கும் நெடியோனை மனந்து னிந்தே ஊரறியக் குறள்மனிதன் என்று நீங்கள் உரைத்தமைக்குக் காரணமென் கால்குறைந்த ஈரடியான் குறளடியான் என்று நோக்கி இவ்வண்ணம் உரைத்திரோ? ஆம் ஆம் உண்மை. வள்ளுவர் பேரவை, சிவகங்கை ാ 14.7, 1963
- இல் அறம்-அறம் இல்லாமல் * கால்குறைந்த ஈரடி ஒன்றே முக்காலடி