இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வள்ளவர் கோட்டம்●
57
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர்கண்ட உடைமைகள் மாடமொடு நீடுமதில் சூழ்ந்திருக்கும் மாமனைகள், விளைந்துவரு நன்செய் புன்செய், தேடரிய பெருஞ்செல்வம், மணியும் பொன்னும் தேர்ந்தெடுத்துச் செய்தஅணிகலன்களோடு மாடணியும் சாகாடு, தொலைவி னின்று வந்திறங்கும் விலையுயர்ந்த ஊர்தி யின்னும் நாடதனில் எதையெதையோ உடைமை என்று நம்பியதைப் பெறுவதற்கே உழலுகின்றோம். இவற்றையெலாம் உடைமையென நம்பி வெ.'. எவ்வகையாற் பெறுதுமெனச் சூழ்ந்து செய்யும் தவற்றையெலாஞ் சொல்வதெனில் யாரால் ஒல்லும்? தந்திரங்கள் வஞ்சனைகள் பொய்ம்மை இன்னும் எவற்றையெலாம் செய்தேனும் வளத்தில் வாழ ஏங்குகிறோம் பிறருயிரை வாங்கு கின்றோம் *அவத்தைஎலாம் நாணாமற் செய்து நின்றே அலைகின்றோம் மலைகின்றோம் இனத்தா ரோடு. 'சாகாடு-வண்டி, *வெஃகி-விரும்பி, "அவத்தை துன்பம், "மலைகின்றோம் சண்டையிடுகின்றோம்