வள்ளவர் கோட்டம்●
58
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 9 58 6 கவியரசர் முடியரசன் கொடுமைபல செய்தவற்றைப் பெற்ற பின்பும் கொண்டபொருள் போதுமெனும் எண்ணம் நெஞ்சிற் கடுகளவும் படுவதுண்டோ? இல்லை யில்லை; கரைகான ஆசையினால் இன்னும் யாரைப் படுகுழியில் தள்ளிடலாம், எவர்தஞ் சொத்தைப் பறித்திடலாம் சுருட்டிடலாம் எனநினைத்தே அடுக்க ழகுப் பார்வையினைச் செலுத்து கின்றோம் ஆறறிவுப் போக்கினையே கொளுத்து கின்றோம். எல்லாமே தனக்குரிமை என்று நாளும் ஏப்பமிடுந் தனியுடைமை யுலக மொன்றாம்; இல்லாமை யில்லாமற் செய்து காக்க எல்லார்க்கும் பொதுவாகும் உடைமை என்று மல்லாடும் பொதுவுடைமை உலகம் ஒன்றாம்; மாநிலமே இவ்விருவே றுலக மாகிப் பொல்லாத விளைவுகளால் மோதி நிற்கப் போராடும் ஒருவழியிற் புகுந்து விட்டோம். தென்னகத்தே தோன்றியநல் லுரிமை தன்னால் தீந்தமிழ்க்குத் தனியுடைமை யாகி நின்று மன்னுயிர்க்கே பொதுமையறம் உரைப்பதாலிம் மார்ந்தர்குலப் பொதுவுடைமை யாகி விட்ட தன்னிகர்த்திருக்குறள்நூல் வகுத்த மைத்துத் தருகின்ற உடைமையெலாம் மறந்து விட்டோம்;
- பொன்னினைத்தே மண்ணினைத்தே மயங்கி நின்று
போராடித் திரிகின்றோம் பகைமை கொண்டோம்
- செய்தவற்றை=செய்து+அவற்றை, பொன் நினைத்தே, மண் நினைத்தே