பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

64

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 64 9 கவியரசர் முடியரசன் 'மானத்தை மாந்தரிடங் காண எண்ணி வானத்தை நோக்குகின்றிர் என்ன கண்டீர்? மானத்தை நகைப்புறவே செய்து விட்ட மண்ணிலதைக் காணாத தாலோ? என்றாள்; தேனொத்த மொழிபுகன்றாய் ஆம்ஆம் உண்மை தேய்பிறையில் அதுகண்டேன், களங்கம் ஒன்று பூணத்தான் மனமின்றி உடலந் தேய்ந்து பொன்றுதற்கு முயல்வதுகாண்! அதுதான் மானம், புகழ்ப்பேறும் பொருட்பேறுங் கருதி வஞ்சப் பொய்ம்மொழிகள் பலபேசி நடித்துக் காட்டி மிகப்பேணத் தகுமானம் விடுத்துப் பின்னர் மேதினியில் ஊனோம்பி வாழும் வாழ்க்கை உகப்பான தெனவுரைக்க ஒவ்வார் மேலோர்; உயிர்விடுத்தும் மானத்தைக் காக்கும் வாழ்வே பகுத்தாயும் அறிவுடையார் உயர்ந்த தென்பர்; பாழ்வயிற்றைக் காப்பதெனில் நாயுங் காக்கும். ஒருமானங் காப்பதுதான் முறைமை என்றால் உலகத்தில் வருமானம் போமே என்பார்; திரிமானஞ் செய்திருந்து பதவிக் காகத் தீமைஎலாம் செய்துயர்வார்; கொள்கை தன்னிற் சரியான பிடிமானம் இல்லார் ஒன்றில் தங்காமற் கிளைதோறுந் தாவித் தாவி வருவார்தம் வாழ்க்கையிலே மானம் எங்கே மறைந்துளதென் றாய்ந்திடினும் காண்பதுண்டோ?