வள்ளவர் கோட்டம்●
65
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 9 65 ைகவியரசர் முடியரசன் சிக்கெடுத்து நெய்தடவி மலர்கள் சூட்டிச் செய்ம்முறைகள் பலசெய்து பேணிக் காத்துத் தக்கபடி வளர்க்கின்றாய் கந்தல் தன்னை; தலைமகளே அதுதலையின் இழிந்து விட்டால் மிக்கதொரு முயற்சியினால் வளர்த்த தென்று மீண்டுமதைப் போற்றுவையோ? சீஎன்று பக்கலிலே எறிந்திடுவை மானந் தாழ்ந்த பதர்மனிதன் நிலையுமது போல்வ தென்றேன். 'நெருநலொரு மணத்தைலம் வாங்கி வந்தேன் நெடுங்கந்தல் அடர்ந்துவரும் ஆசை யாலே பொருண்மிகவுஞ் செலவிட்டேன் எனநினைந்தோ புகலுகின்றீர் இவ்வண்ணம் எனப்பு லந்தாள்; அருள்விழியே உவமைக்குச் சொன்னே னன்றி அணுவளவும் உனைக்கருதிச் சொன்னே னல்லேன், பொருணிறையுந் திருக்குறளிற் கண்ட சொல்லைப் புகன்றதலால் நெஞ்சறிய மற்றொன்றில்லை. என்று சொலி யருகிருந்தேன்; பதவி தன்னால் எண்ணரிய செல்வத்தால் அறிவு கல்வி ஒன்றுதவ வேடமெனும் இவற்றா லெல்லாம் உயர்வெய்தி யுலகத்து மாந்தர் முன்னே குன்றனைய வாழ்வினரும் மானங் குன்றும் கொடுமைகளைச் செய்கின்றார் குறளுஞ் சொல்வார் நன்றுசெய நினைவார்போல் நடிப்புஞ் செய்வார் நாடிவரால் நலம்பெறுமோ நவில்க என்றாள்.