பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

66

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 66 0 கவியரசர் முடியரசன் குன்றனைய வாழ்வினரும் மானங் குன்றின் கொடுவிலங்கே அவர்க்குநிகர் என்னல் சாலும் என்றுரைக்க நினைந்திடினோ கவரி மாவந் தெனையுவமை சொல்லற்க எனத்த டுக்கும்; ஒன்றுமயிர் நீங்கிடினும் உயிரை வேண்டா உயர்பண்பை அதுதன்பாற் கொண்டதாலே, நன்றெனவே உயிர்விரும்பி மானம் போக்கும் நல்லவர்க்கோர் உவமைசொல ஒன்று மில்லை. தன்னிலையிற் றாழாமை வேண்டும் வேண்டும் தாழ்வுவரின் வாழாமை வேண்டும் வேண்டும் தன்னுயிரை மிகச்சிறிதா எண்ணல் வேண்டும் தகுமானம் ஒன்றனையே காத்தல் வேண்டும் புன்னலமே காப்பதற்கு மாற்றான் பின்னே போயவனை வால்பிடித்து வாழல் வேண்டா என்னுமொரு குறிக்கோளில் வாழ்ந்து நின்றால் இனியகுறள் தோன்றியதன் பயனைக் காண்போம். பொதுவாழ்விற் புகுந்திடுவோர் மான மெண்ணிப் புகுவாரேல் அவர்கனவு பலிப்பதில்லை அதுபோகத் தனிவாழ்வில் மானம் ஒன்றே தளராமற் சிதையாமற் காத்தல் வேண்டும் மதுவாழும் மலர்க்குழலி நினக்கும் ஒன்று மறைவாக மெதுவாகச் சொல்லுகின்றேன் பொதுவாகக் குறையாடை, மானம் வேண்டும் பொற்றொடியார் அணியாமை வேண்டும் என்றேன்.'

      • *** *** *** ***

வள்ளுவர் விழா,