வள்ளவர் கோட்டம்●
72
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 9 72 6 கவியரசர் முடியரசன்
இன்னுஞ் சிலமொழி இசைத்தனன் என்பால்; 'ஏதிலார் குற்றம் எடுத்தெடுத் தியம்பித் தீதுகள் சேர்க்கத் தெரிந்தனை நின்பாற் சேர்ந்துள குற்றம் தேர்ந்துணர் பெற்றிமை பெற்றாயல்லை, பெற்றனை யாயின் உற்றொரு திதும் உனைவருத் தாதே என்றவன் உரைமொழி ஏற்றது முதலா ஒன்றிய குற்றம் ஒன்றா தொழித்தேன்; உள்ளத் துாய்மையும் உயர்பெருந் தெளிவும் தெள்ளத் தெளியத் தெரித்தனன் அதனால் அவனே தலைவன் அவற்குநான் அடிமை; தவமே செய்தேன் தலைவனைப் பெற்றேன்; கற்கும் பருவங் கடந்தேன் கட்டெழில் நிற்கும் பருவம் நெருங்கிய தென்னை, மங்கை ஒருத்தி மாலை சூட்டிடப் பொங்கும் இன்பப் புத்துல கதனில் உறவைப் பெருக்கும் ஒருநெறி புகுந்து நிலவுப் பயன்கொள நினைந்ததென் மனனே, மங்கையர் இன்பம் மாபெருந் துன்பம் எங்கும் இடர்தரும் இருளுல கதுவாம் துறவைப் பெருக்கித் துயரின் நீங்கி இறவாப் பெருநெறி எய்துக என்றொரு குரலுங் கேட்டது குழம்பிய தென்மனம்; உரவோன் மனமுவந் துலகுக் குணர்த்தும் குறளுங் கேட்டது குழப்பந் தெளிந்தது; 'அறநெறி நின்றே இல்வாழ்வாற்றின் புறநெறி யதனுள் போய்ப்பெறும் பயன்என்? அறனெனப் பட்டதே இல்லறம் அதனைப்