வள்ளவர் கோட்டம்●
73
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 9 73 ைகவியரசர் முடியரசன் - - பிறன்பழிப்பின்றி பேணுக என்றனன் தலைவன் அவன்சொல் தலைமேற் கொண்டேன்; நலமிகு மனையாள் நற்றுணையாக, மனமகிழ் வுடனே வாழ்க்கைத் தோணி இன்பக் கடலுள் இனிதே மிதந்தது; முன்பின் அறியா மொய்ம்புடை வறும ை வன்புடன் புயலென வந்து விசிடப் பற்றாக் குறையெனும் பாழ்அலை மேலெழச் சுற்றிய கவலை சுறாவென எதிர்ந்திட முற்றிய துயர்க்கடல் மூழ்கித் தவித்தேன்; வழிதெரியாதுளம் வாடிடும் எனக்கு வழிசொலுந் தலைவன் வருவனோ என்று தாங்காத் துயரந் தாங்கிக் களைத்தேன்; நீங்காத் தலைவன் நேரினில் தோன்றி, 'ஏங்கேல் தம்பி, இடுக்கண் வருங்கால் ஆங்கே: நகுக, அதுவே மருந்தாம் அடுக்கிய இடுக்கண் அளப்பில வரினும் மடுத்தவா யெல்லாம் பகடென முயன்றால் இடுக்கண் என்செயும்? எழுச்சிகொள் தம்பி, எதையுந் தாங்கும் இதயம் வேண்டும் எனவழிகாட்டினன் என்னுடைத் தலைவன்; கனிந்த மொழியன் காட்டிய வழியால் துணிந்தேன் முயன்றேன் துயரே இல்லை! இன்பம்! இன்பம்! இணையிலா இன்பம்! உள்ளஞ் சோர்வுறின் ஓடிவந் தென்பால் வள்ளுவன் காட்டிய வழியெலாம் விளம்பின் ஒன்றா இரண்டா ஒரா யிரமாம்; குன்றாவளத்துடன் கூர்மதி இருப்பினும் நன்றாம் பணிதல் நாடுக இதனை: