பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

78

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 78 கவியரசர் முடியரசன்

செந்தமிழ நாட்டகத்துச் சேர்ந்திருந்தும் எங்கிருந்தோ வந்தமொழி கேட்டேயோ?மாறினைநீகல்லாக” என்றெல்லாஞ் சொல்லி இனைந்து மனமுருகி நின்றன்னான் வெய்துயிர்த்து நீடு நினைந்தழுவான்; “கறு படுத்திடவே கறுஞ் சமயங்கள் நூறு வகையாம்! துவல்வழியும் வெவ்வேறாம்! எல்லாருங் கொண்டொழுகற் கேற்ற நெறிமறந் தல்லா நெறிபுகுந்தே அல்லற் படுகின்றார்; ஒன்றே குலமாக ஒன்றே இறையாக நன்றே புகல்நெறியை நாடாமல் ஒடுகின்றார்; ஒற்றுமைதான் இங்கே உருப்படுமா? மக்களுக்குள் பற்றுள்ளந் தோன்றிப் பரவிடுமா? இம்மாந்தர் நெஞ்சகத்தே மாசகற்ற நேராமல் எத்துறையும் வஞ்சித்தே ஆகுலங்கள் வாய் விட்டொலிக்கின்றார். என்று மனம் நைந்தெழுந்து நடந்தகன்று நின்று விழியால் நிலவுலகை நோக்கிடுவான்; வாழ்கின்ற மாளிகையோ வான முகட்டளவு ஏழ்நிலைய மாடத் தெழிலோ டுயர்ந்திருக்கும்; உள்ளுறையும் மாந்தர் உள்ளமோ கீழ்நோக்கிப் பள்ளம் படுகுழியில் பாய்ந்து விழுந்திருக்கும்; உண்டு களித்திருப்போர் ஒர்புறத்து மாளிகையில் பண்டை அரசரெனப் பஞ்சணையில் சாய்ந்திருப்பர்; நெஞ்சுலர்ந்து வாயுலர்ந்து நிற்கும் இடமிழந்து பஞ்சையர்கள் ஒர்புறத்தே பட்டினியில் வீழ்ந்திருப்பர்; மஞ்சு தவழ்ந்து வரும் மாடமனை ஒர்புறத்து விஞ்சும் எழில் தாங்கி விறுபெற நின்றிலங்கும்;

"இனைந்து - மந்தி