உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

84

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 84 ைகவியரசர் முடியரசன் யாதுமொரு நாட்டினரும் யாதுமோர் ஊரினரும் காதம் பலவெனினும் காணப் படுமுயர்வும் வற்றி வறந்தாலும் வந்தார் வளம்பெறவே உற்றருளும் வண்மை உயர்பண்பும் பெற்றமையால் ஈங்குநாம் செய்தவத்தின் ஏற்றத்தால் வந்தவனை ஒங்கும் மலைதனக் கொப்பென் றுரைத்திடலாம்; எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருளைச் செப்பி உணர்வித்துச் சேர்அய்யம் நீக்கிச் சமன்செய்து சிர்துக்குங் கோல்போ லமைந்து நமருய்ய வந்தவனை நல்லாசான் என்றுரைப்போம்; மங்கலமாய் நின்றானை மாநிலத்தார் எல்லாரும் பொங்கிமனம் மேற்கொளவே பூத்திங்கு வந்தானை இன்றி யமையா திலங்கும் பெருமானை நன்று முகமல்ரும் நாண்மலருக் கொப்பானைக் காலம் அறிந்துகலை கற்கும் இடனறிந்து சால அறநெறிகள் சாற்றுவித்த சான்றோனைச் சொல்லும் நெறியனைத்துஞ் சூழ்ந்து மனத்தமைத்து மெல்ல முகமலர்ந்து விள்ளுதிரு வாயானைக் கொள்வோன் குறிப்புணர்ந்து கொள்ளும் நிலையறிந் துள்ளங் கொளுமாறுரைக்கின்ற வித்தகனை ஆசான் எனப்பெற்றோம் அன்னவனை நாம்தொழுது பேசாநாள் எல்லாம்| பிறவாத நாளன்றோ? அன்னமெனக் கிள்ளை.என ஆடெனவே மாணவர்க்கு முன்னர் உவமைகளை முன்னோர் மொழிந்திடுவர்; முந்நிலைய மாணவர்க்கும் முப்பால் மொழிந்தவன்தான் அந்நிலையில் நில்லாமல் அப்பாலும் ஒதுகின்றான், நூல்பகரார் என்று துவன்று வைத்த மாணவர்க்கும்