பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

90

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் வழி கார்மேகம் நெடுவானில் சூழும் போது கானமயில் தோகைவிரித் தாடல் செய்யும், கர்வேனிற் பருவநிலை வந்தால் எங்கும் கடிவுகிற இசைக்குயில்கள் பாடல் செய்யும்; நீர்சூழும் பொழுதத்துக் குளத்தில் வாழும் நெடுங்கயல்கள்துள்ளிவிளையாடும் ஒடும் பார்மகிழ எழிற்கலைகள் தோன்ற வேண்டின் பண்பட்ட சூழ்நிலைகள் வாய்க்க வேண்டும். ஊர்வாழச் சிiபாடும் கவிஞன் வாழ்வில் உவகைஎனும் தண்முகில்கள் சூழ்ந்து நின்றால், *ஏர்வாழும் இளவேனிற் பருவந் தோன்றி இன்பமெனும் இளந்தென்றல் வீசிச் சென்றால் பேர்வாழும் அவன்நெஞ்சில் உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கும்; கலையுணர்வும் ஒங்கி நிற்கும்; பார்வாழ வழிபுகல்வான்; தோகை கொண்ட பச்சைமயில் போலாவான்; குயிலும் ஆவான். "ஏர் வாழும் அழகு பொருந்திய