பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வள்ளவர் கோட்டம்

92

 கவியரசர் முடியரசன்




அரிவையர்க்கு வழிசொல்லும் ஆண்மை மிக்க
ஆடவர்க்கும் வழிசொல்லும்; கல்வி கற்கும்
சிறியவர்க்கு வழிசொல்லும்; கற்றுத் தேர்ந்த
சீரியர்க்கும் வழிசொல்லும்; வயதால் மூத்த
பெரியவர்க்கு வழிசொல்லும் இளைஞ ருக்கும்
பின்பற்ற வழிசொல்லும்; தமிழ நாட்டுக்
குரியவர்க்கு வழிசொல்லும் உலகமாந்தர்
உய்வதற்கும் வழிசொல்லும் குறளின் பாட்டு.


மனக்கோட்டம் தவிர்க்கஒரு நூலைத் தந்து
வாழவழி சொன்ன திருவள்ளு வற்கு
வனப்பூட்டும் திருக்கோட்டம் அமைத்து நெஞ்சில்
வளர்ந்துவரும் நன்றியினை யுணர்த்தும் வண்ணம்
மனப்பூட்டைத் திறந்தாரை வாழ்த்தும் வேளை
மாகவிஞன் வள்ளுவற்குக் கோட்டம் ஏனோ?
எனக்கேட்டான் ஒருபேதை; நன்றி யின்றி
எதையேனும் உளறுவதே தொழிலாக் கொண்டோன்


எதையேனும் எழுதுவது, கண்ணை மூடி
எப்படியோ உளறுவது துணிவென் றெண்ணிக்
கதையாக அளப்பதெலாம் துணிவே அன்று;
கயமைஎன அதைஉலகம் கடிந்து சொல்லும்;
இதையேதான் எழுதிடுவேன் இப்படித்தான்
இயம்பிடுவேன் எனவரம்பு பூண்டு நின்று,
பதையாமல் இடர்வரினும் தொடர்ந்து செல்லும்
பயணந்தான் துணிவென்று சான்றோர் சொல்வர்.