பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துள்ளுனர் சொல்லமுதம் தானமாவது யாது? அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல், தவமாவது யாது? மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மைபற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன என்று குறித்தார் பரிமேலழகர், - இல்லறத்திற்குரிய தானமும் துறவறத்திற்குரிய தவமும் தடையின்றி நடைபெறுதற்கு மழை இன்றி வமையாதது என் ருர் வள்ளுவர். மழை இல்லையேல் மாநிலத்து உயிர்கட்கு வாழ்வில்லை. தவமுடையார் இலதாயின் தாரணிக்கண் தண்மழை பொழிவதுமில்லை. துறவியர் தலம் துய்மையுற நடைபெறவேண்டுமாளுல் தல்லாட்சி புரியும் வேந்தன் நாடாள வேண்டும். இல்லறத்தார் இலராயின் வேந்தனும் இலகுவான். இக் கருத்துகளைக் கூர்ந்து நோக்குவோமாயின் அனைத் திற்கும் அடிகோலுபவர் இல்லறத்தாரே என்பது அறியப் படும். இல்வாழ்வார் செய்யும் தானமாகிய நல்லறமே தவம் புரிவார் வாழ்வைத் தழைவிக்கிறது. அவரது அருந்தவமே பெருமழையைப் பொழிவிக்கிறது. அம் மழையினுல் நாடும் காடும் செழிக்கின்றன. நாட்டில் வாழும் குடிகள் நலமெய்துகின்றனர். அவரை ஆளு தற்கு அரசன் ஒருவன் தேவைப்படுகிருன். - தாட்டில் மழை வளம் செழிப்பதற்கு மன்னவன் ஆட்சியும் ஒரு காரணமாகும். செங்கோல் வேந்தன் ஆளும் நாட்டில் பருவமழை பொழிவதும், விளையுள் பெருகுவதும் தப்பா என்பர் ஒப்பில்புலவர். "இயல்புளிக் கேலோச்சும் மன்னவன் நாட்டி பெயலும் வி ைபுளும் தொக்கு” என்பது அவரது சொல்லமுதம் மகில வனம் காணக் சென்ற சேரவேந்தளுகிய செங்குட்டுவளைப் பேரியாற்றங் கரை மணல்மேட்டில் தண்டமிழ் ஆசாளுகிய சாத்தனர்